முக்கிய செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரச்சாரமா? அச்சுதானந்தன்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      அரசியல்
Achu 1

திருவனந்தபுரம், ஏப்.21 - மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களுக்காக தாம் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று கேரள முதல்வரும், பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் 6 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சில தினங்களுக்குமுன் முதல்கட்ட வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மீதமுள்ளது. இதனிடையே நேற்று கேரளத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிரச்சாரம் செய்ய மேற்குவங்கம் செல்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அச்சுதானந்தன், நான் அங்கு செல்லவில்லை என்று ரத்தினச்சுருக்கமாக பதிலளித்தார். 

கேரளத்தில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் இ. கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி தனி மெஜாரிட்டி பெற்று வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மீண்டும் நீங்கள்தான் முதல்வரா? என்று கேட்டபோது, அது பின்னர் முடிவு செய்யப்படும் என்றார் அச்சுதானந்தன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: