அம்மாவை பிரதமராக்குவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

தேனி,பிப்.10 - வரும் பிப்.24-ல் தமிழக முதல்வரும் ,கழக பொதுச்செயலாளருமான அம்மாவின் 65-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்,என்று தேனி ஏ.பி.எம்.ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி,முன்னாள் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான்,கம்பம் நகர்மன்ற தலைவரும் ,மாவட்ட செயலாளருமான டி.டி.சிவக்குமார்,ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.தங்கதமிழ்செல்வன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனை கூட்டத்திற்கு வந்தவர்களை தேனி நகர்மன்ற தலைவரும்,நகர செயலாளருமான தேனி முருகேசன் வரவேற்றார்.கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று பேசியதாவது :

தமிழக முதல்வரும்,கழக பொதுச்செயலாளருமான அம்மாவின் பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடுவதை பற்றி ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.பிறந்த நாளன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கவேண்டும், கோவில்கள்,பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்களில்  சிறப்பு பிரார்த்தனை நடத்த வேண்டும்.ரத்த தான முகாம்,மருத்துவமுகாம்,கண்சிகிச்சைமுகாம் போன்ற முகாம்களை நடத்த வேண்டும்.ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கி,சுவையான உணவு வழங்க வேண்டும்,நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு பழங்கள்,ரொட்டி,பால் வழங்க வேண்டும்.அதிமுக நிறுவனத்தை துவங்கிய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியையும்,தொண்டர்களையும் அரவணைத்து வந்தார்.ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார்.அவர் மறைந்த பின் கழக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்கள் பதவியேற்று கழக தொண்டர்களை அரவணைத்து செயல்படுத்தி வருகிறார்.முதல்வராக பதவியேற்றவுடன் ஏழை,எளிய,மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.தமிழக முதல்வர் போடும் திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்கள் பாராட்டுகிறார்கள்.ஏழை,எளிய,மக்களுக்காக  நம் முதல்வர் அயராது பாடுபடுகிறார்.மேலும் தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றி கொண்டு வரும் நம் முதல்வரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறச்செய்து பாரதபிரதமராக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று நிதியமைச்சர் பேசினார்.கூட்டத்தில் பழனிசெட்டிபட்டி இளைஞர்,இளம்பெண்கள் பாசறை செயலாளர் மிதுன்சக்கரவர்த்தி அம்மா பிறந்தநாளன்று பேரூராட்சியில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு 4 கிராம் தங்கம் வழங்குவதாக கூறினார்.கூட்டத்தில் முன்னாள் எம்.பி.ராமசாமி ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.கணேசன்,பொன்னுப்பிள்ளை,பெரியவீரன்,பொதுக்குழு உறுப்பினர் கம்பம் ராஜாமணி,தேனி மாவட்ட சிறுபான்மை இனத்தலைவர் துப்பாக்கிரகமத்துல்லா,பொருளாளர் ராமையா,இணைச்செயலாளர் முகமதுராவுத்தர்,கம்பம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் அண்ணாபுரம் சுப்பையா,மாவட்ட துணை செயலாளர் சுருளிமஸ்தான்,நகர தலைவர்கள் போடி பழனிராஜ்,சின்னமனூர் சுரேஷ்,கூடலூர் அருண்குமார்,ஒன்றிய செயலாளர்கள் பெரியகுளம் செல்லமுத்து,,சின்னமனூர் முத்துச்சாமி,தேனி மாவட்ட விவசாய அணி செயலாளர் வரதராஜன்,துணை செயலாளர் பாலார்பட்டி பெரியகருப்பன்,மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் மகாலிங்கம்,துணைத்தலைவர் ஆண்டி,தேனி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் அம்சகோமதிவிப்ரநாராயணன்,துணைத்தலைவர் ரமேஷ்பாபு,மகளிர் மாவட்ட செயலாளர் டாக்டர் தனலட்சுமி சொக்கலிங்கம்,நகர்மன்ற துணைதலைவர்கள் பெரியகுளம் அப்துல்சமது,தேனி காசிமாயன்,சின்னமனூர் தெய்வநாயகம்,தேனி ஒன்றிய இளைஞர்,இளம்பெண்கள் பாசறை ,ஒன்றிய செயலாளர் முத்துபாலாஜி,அம்மாபேரவை மாவட்ட செயலாளர் டி.ஆர்.என் வரதன்,வீரமணி,மில்லர் மணிகண்டன்,வைகை கருப்புஜி,ஜெயமணி, மற்றும் கழக நிர்வாகிகள் ,கிளை செயலாளர்,தொண்டர்கள் ,இளைஞர்,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: