வால்மார்ட் வர முடியாது: ஆர்ப்பாட்டத்தில் சரத்குமார் ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.10 - வால்மார்ட் வருவதாக கூறுகிறார்கள் வால்கூட வரமுடியாது என்று  சரத்குமார் எம்.எல்.ஏ கூறினார்.

வள்ளூவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்து பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்தும் அன்னிய முதலீட்டை திரும்ப பெறு, வால்மார்ட் நிறுவனத்தை நுழைய விடமாட்டோம் போன்ற கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-​

அன்னிய முதலீட்டால் சில்லறை வணிகம் பாதிக்கப்படும் என்று பலரும் சொல்லி வரும் வேளையில் மத்திய அரசு பிடிவாதமாக அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

இதே போல் தான் ஆங்கிலேயர்கள் வியாபாரத்துக்காக முதலில் இந்தியா வந்தனர். பின்னர் நாட்டையே அடிமையாக்கி ஆண்டனர். அவர்களை விரட்டியடிக்க மகாத்மா காந்தி எவ்வளவு பாடுபட்டார். எத்தனை போராட்டங்கள் நடந்தன. இதே போன்ற ஒரு நிலையை உருவாக்க அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறீர்கள்.

அன்னிய முதலீடு வந்தால் இங்கு முதலாளியாக இருப்பவர்கள் அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்​அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சியும் குரல் கொடுத்து வருகிறது.

வானகரத்தில் வால்மார்ட் வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு வால் கூட வர முடியாது. மீறி வந்தால் அங்கு சிந்தும் முதல் ரத்தம் சரத்குமாரின் ரத்தமாக இருக்கும். முன்னே நின்று போராடும் தலைவரைத்தான் சமத்துவ மக்கள் கட்சி பெற்றுள்ளது. வியாபாரிகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். ஆனால் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. மற்ற நாடுகளில் விரட்டி அடிக்கப்பட்ட வால்மார்ட் இந்தியாவிற்குள் மத்திய அரசு கொண்டுவருகிறது சட்டமன்றத்தில் அந்நிய முதலீட்டை நுழைவதை  முதல்வர்  தீர்மானம் நிறைவேற்றினார். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது.  அதற்கு  நாம் துணை இருப்போம். டெல்டா விவசாயிகள் நிவாரணம் வழங்கிய முதல்வருக்கு நன்றி  தெரிவித்து,  சமத்துவ மக்கள் கட்சி 6 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்து, மக்கள் இயக்கமாக, மக்களுக்காக இயங்குகிறது. நமக்கு பதவி முக்கியமல்ல.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் செல்வராஜ், பொது செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில இளைஞரணி செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு, கலை இலக்கிய செயலாளர் விவேகானந்தன், தென் மண்டல செயலாளர் சுந்தர், மாநில வக்கீல் அணி செயலாளர் நிரஞ்சன் குமார், மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், ராஜா, பிரசாத், நாதன், எஸ்.எஸ்.அமுதன், மரியமாணிக்கம், சந்திரபோஸ், பாபு, சுந்தராஜ பண்ணையார் மற்றும் ஆர்.கே.நகர் ரமேஷ், சுரேஷ்குமார், மகாலிங்கம், ஸ்ரீராஜ், தங்கையா பாண்டியன், ராஜசேகரன், ரவி, ஒஸ்வால்ராஜா, சேதுராமன், முருகேச பாண்டியன், ஆர்.கே.நகர் பி.ராஜா, ரமேஷ், சுரேஷ்குமார். தங்கராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: