முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20: இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, பிப். 10 - நியூசிலாந்திற்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது டி - 20 போட்டியில் இங்கிலாந்து அணி 40 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொ டரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், ரைட் மற்றும் மார்கன் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக பேர்ஸ் டோ, பட்லர், லம்ப் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான பிராட் மற்றும் பின் இருவரும் நன்கு பந்து வீசி 7 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆதரவாக, ரைட் பந்து வீசினார். 

இங்கிலாந்து அணி கேப்டன் கிறிஸ் பிராட் தலைமையில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் பிரண்டன் மெக்குல்லம் தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே இரண்டு டி - 20 போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க்கில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கி லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவ ரில் 7 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் மார்கன் அதிகபட்சமாக 26 பந்தில் 46 ரன் எடுத் தார். இதில்  4 பவுண்டரி மற்றும் 3 சிக் சர் அடக்கம். ரைட் 20 பந்தில் 42 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, பேர்ஸ்டோ 38 ரன்னையும், பட்லர் 32 ரன்னையும், லம்ப் 22 ரன்னையும், ஹேல்ஸ் 21 ரன் னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், போல்ட், ஹிரா மற்றும் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், மெக்கிளீனகான் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 215 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இங்கி. அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 174 ரன்னில் சுருண்டது. 

இதனால் இந்த முதல் டி - 20 போட்டி யில் இங்கிலாந்து அணி 40 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. 

நியூசி. தரப்பில் துவக்க வீரர் குப்டில் அதிகபட்சமாக 32 பந்தில் 44 ரன் எடுத் தார். முன்ரோ 19 பந்தில் 28 ரன் எடுத் தார். தவிர, ரூதர் போர்டு 18 ரன்னையு ம், மெக்குல்லம் 10 ரன்னையும், டெய்லர் 13 ரன்னையும், ஹிரா 20 ரன்னையு ம் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், பிராட் 24 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்எடுத் தார். பின் 39 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். தவிர, ரைட் 2 விக்கெ ட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரைட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்