முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      வர்த்தகம்
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா, ஏப். 21 - 3 செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த வெற்றி இந்திய விஞ்ஞானிகளை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. இந்தியாவில் உள்ள இயற்கை வளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் அளவு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக ஆய்வு செய்ய ரிசோர்ஷ் சாட்​2 என்ற செயற்கை கோளை தயாரித்தனர். இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவும் பணி தொடங்கியது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-16 என்ற நவீன ராக்கெட் உருவாக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவும் பணி நேற்று காலை சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. சரியாக 10.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கிக் கொண்டு அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்டின் 3 பாகங்களும் திட்டமிட்டபடி பிரிந்தன. இதையடுத்து ராக்கெட் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சரியாக சென்றது. இதனால் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ரிசோர்ஷ் சாட் செயற்கை கோளுடன் யூத் சாட், எக்ஸ் சாட் ஆகிய 2 சிறிய ரக செயற்கை கோள்களும் அனுப்பப்பட்டன. ராக்கெட் பறந்து சென்ற 18​வது நிமிடத்தில் 3 செயற்கை கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்தன. nullமியில் இருந்து 822 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டன. 3 செயற்கைக் கோள்களும் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 

ரிசோர்ஷ் சாட்​2 செயற்கை கோள் இந்தியா தயாரிப்பாகும். இது மொத்தம் 1,206 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் 18​வது செயற்கை கோளான இது சூரிய சக்தி மூலம் தானாக இயங்கும். ரிசோர்ஷ் சாட் செயற்கைக் கோளின் 3 நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கோமிராக்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

மற்றொரு செயற்கை கோளான யூத் சாட் இந்தியா-ரஷியாவின் கூட்டு தயாரிப்பாகும். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள மாணவர்கள் இந்த செயற்கை கோளை உருவாக்கினார்கள். 92 கிலோ எடை உள்ள இந்த செயற்கை கோள் மூலம் சூரிய கதிர் வேறுபாடுக்கும், காற்று மண்டல உயர்தட்டு பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். 

3​வது செயற்கைக்கோள் எக்ஸ்சாட் எனப்படும். இந்த செயற்கை கோள் 106 கிலோ எடை கொண்டது. இது சிங்கப்nullர் நாட்டின் முதல் செயற்கை கோளாகும். இந்த செயற்கை கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி படம் பிடிப்பதற்கு உதவும் பணியை செய்ய உள்ளது.

இந்தியா ஏற்கனவே ரிசோர்ஷ் சாட்​1 என்ற செயற்கைகோளை 2003​ம் ஆண்டு விண்ணில் ஏவி இருந்தது. அதன் ஆயுள் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து ரிசோர்ஷ் சாட்​2 செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் முந்தைய ரிசோர்ஷ் சாட்​1ன் பணிகளையும் சேர்த்து செய்யும். 

கடந்த ஆண்டு இந்தியா அனுப்பிய 2 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.​எப் 06 ராக்கெட்டும் அதன் பின்னர் டிசம்பர் மாதம் 25​ந்தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.​ டி-3 ராக்கெட்டும் நடுவானில் வெடித்து சிதறின. இதனால் இந்திய விஞ்ஞானிகள் மிகவும் கவலையுடன் இருந்தனர். 

இவர்களது கவலையை போக்கும்விதமாக ன்று அனுப்பப்படும் ராக்கெட் என்ன ஆகுமோ? என்ற வேதனை அவர்களிடம் இருந்தது. ஆனால் ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததை அடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதாகிருஷ்ணன் விஞ்ஞானிகள் அனைவரையும் கை குலுக்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறும் போது, இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஊக்கத்தால் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். 2 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் நாம் அனுப்பி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு சர்வ தேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். மத்திய மந்திரி நாராயண சாமி ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டார். அவர் கூறும்போது, இந்த ராக்கெட்டை வெற்றி கரமாக ஏவி இருப்பது இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்திய விஞ்ஞானிகள் தங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். இதற்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங், சேனியா காந்தி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறார்கள் என்றார். இந்தியா இதுவரை பி.எஸ்.எல்.வி. வரிசையில் 18 ராக்கெட்டுகளை ஏவி உள்ளது. இதில் முதல் ராக்கெட் 1993​ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20​ந் தேதி ஏவப்பட்டது. அது மட்டும் தோல்வி அடைந்தது. மற்ற அனைத்து ராக்கெட்டுகளுமே வெற்றிகரமாக பறந்து உள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 44 மீட்டர் உயரம் 295 டன் எடை கொண்டது. இதில் 1,600 கிலோ வரையிலான செயற்கை கோள்களை ஏவ முடியும். இந்தியா இதுவரை 44 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி உள்ளது. அதில் 25 செயற்கை கோள்கள் வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டன. மற்ற அனைத்து செயற்கை கோள்களையும் இந்தியாவே சொந்தமாக ஏவி உள்ளது. 2008​ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் செயற்கை கோளும், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்