திருப்பூரில் தார்சாலை பணி: அமைச்சர் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.10 - தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருப்பூர் மாநகராட்சி, மண்டலம்-1-க்குட்பட்ட கீழ்கண்ட பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் பூமி பூஜை விழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கீழ்கண்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.

வ.எண்.1 வார்டு எண்.5-ல் ஆத்துப்பாளையம் மின் மயானம் அருகில் புதிய தார்சாலை ரூ.ஒன்பது லட்சத்தில் துவக்கி வைக்கிறார்.

மேலும் இன்று காலை 9.00 மணியளவில் நெசவாளர் காலனி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர்  ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட மருத்துவ அணி  மற்றும் கோவை கே.ஜி.மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மக்கள் நல இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாமை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைக்க உள்ளார்.

மேலும் இன்று காலை 10.00 மணியளவில் பல்லடம் வட்டம், வடுகபாளையத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு 1334 பயனாளிகளுக்கு வழங்க உள்ளார் என்பது செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: