ஓகேனக்கல் கூட்டுக்குடி தண்ணீர் பணி: அமைச்சர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

தருமபுரி பிப்.10 -  ஒகேனக்கல் தலைமை தண்ணீர்ரேற்று நிலையம் மற்றும் தலைமைப் பணியிடம், சுத்திகரிப்பு நிலையம், நீதண்ணீருந்து நிலையம், மடம் சமநிலைத்தொட்டி, மூங்கில்பட்டி பொது நீதண்ணீருந்து நிலையப் பணிகள், மகேந்திரமங்கலம் நீருந்து நிலையப்பணிகள், காடுசெட்டிப்பட்டி நீதண்ணீருந்து நிலையப் பணிகள், தின்னூர், ஜெக்கேரியில் திட்டப்பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஓசூரில்  நடைபெற்ற திட்டப் பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.முனுசாமி பணிகளை ஆய்வு செய்தார்.  திட்டப் பணிகளை  விரைந்து முடித்தமைக்காக பொறியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆங்காங்கே உள்ள சிறுசிறு பணிகளையும் விரைந்து முடித்திட  அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

           இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிதண்ணீநீர் வழங்கல் துறை செயலாளர் சி.வி.சங்கர் தமிழ்நாடு குடிநீதண்ணீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம். தலைமை திட்டப்பொறியாளர் .எஸ்.டி.கோபால்ராம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) ப.இராமர், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .கே.இ.கிருஷ்ணமூர்த்தி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்  மனோரஞ்சிதம்நாகராஜ், கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம், செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, பி.மணிவண்ணன், மோகன்ராஜா, கோபாலகிருஷ்ணன், சத்தியசீலன், அந்தோனிசாமி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: