தேனிமாவட்டம் அய்யம்பட்டியில் ஜல்லிகட்டு 40 பேர்காயம்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

கம்பம் பிப்- 11 - தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஸ்ரீ வல்லடி கார சுவாமி அருள்மிகு ஏழைகாத்தம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு  நேற்று ஜல்லி கட்டு விழா நடைபெற்றது அய்யம்பட்டியில் ஸ்ரீ வல்லடி கார சுவாமி கோவில் திரு விழாவை முன்னிட்டு பல ஆண்டுகளாக ஜல்லிகட்டு விழா நடைபெற்று வருகிறது  இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி ஜல்லிகட்டு நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்டகலெக்டர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி பிரவீன்குமார் அபினவு முன்னிலை வகித்தார் தமிழ்நாடு ஜல்லிகட்டு வீர விளையாட்டு பேரவைத்தலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்   ஜல்லிகட்டில் பங்கேற்க கொண்டு வரப்பட்ட  காளைகளை கால்நடை பராமாரிப்பு துறையினர் பரிசோதித்து அனுமதித்தனர் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்;;;;;;;டு  சீருடை அணிந்தவர்கள் மட்டும் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டில் நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளர் சின்னமனுாரைச் சேர்ந்த அழகர் மகன் சஞ்சீவி உயிரிழந்ததையடுத்து அய்யம்பட்டியில் அசாம்பவிதத்தை தடுக்க ஜல்லிகட்டை காணும் பார்வையாளர்கள் பஙகேற்போர் உள்ளிட்ட எவரும் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன குறிப்பாக காளைகள் பார்வையாளர்கள் பக்கம் செல்ல முடியாத வகையிலும் காளைகள் முடிவு இடத்திற்கு அடுத்து எங்கும் செல்ல முடியாத வகையில் பிடிபடவும் வளை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன மாடு பிடி வீரர்களுக்கும் காயம் அதிகம் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன     தேனி திண்டுக்கல் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் சேலம் புதுக்கோட்டை விருதுநகர் ஆகிய மாவட்டங்களை ச்சேர்ந்த 575க்கு மேற்பட்ட காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் ஜல்லிகட்டில் பங்கேற்றனர் காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது வாடிவாசல் பகுதியில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆவேசத்துடன் மடக்கப்பிடித்து அடக்கினர் சில காளைகள் வீரர்களிடம் சிக்கமால் சென்றன காளைகளை அடக்க முயன்ற போது 30 வீரர்கள் காயமடைந்தனர் காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஜல்லிகட்டில் வெற்றி பெறற வீரர்களுக்கும் மாடு பிடிபடதா மாட்டு உரிமையாளர்களுக்கும் தங்கநாணயம் டி.வி.டி. பிளேயர் மிக்சி குக்கர் மின்விசிறி உள்ளிட்டபல பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் ஆய்வாளர் விஜயாராணி  பி.ஆர்.ஓ.ராஜா உத்தமபாளையம் தாசில்தார் ஜவஹர்பாண்டியன் ஆர்.டி.ஓ.கண்ணன் சழூக திட்டதாசில்தார் ராம்ஜி வட்டவழங்கல் அலுவலர் பாலசண்முகம் மற்றும்  பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் அனைத்து தரப்பு பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கோனோர்

; கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி தலைவர் அண்ணாத்துரை அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷணன் தலைமையில் கிராம கமிட்டியினரும் அய்யம்பட்டி ஊர் பொதுமக்களும் ஜல்லிகட்டு குழவினரும் ஊராட்சி நிர்வாகத்தினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் தவிர ஊராட்சி சார்பில் கூடுதல் குடிநீர் விளக்கு இணைப்புகள் செய்யப்பட்டிருந்தன   ஜல்லிகட்டு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சின்னமனுாரில் இருந்து அய்யம்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன  போட்டோ விபரம்  அய்யம்பட்டி ஜல்லிகட்டு போட்டோ தேனி பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் இருந்து தாங்களின் அலுவலக இமெயில்க்கு  5 போட்டோக்கள் அனுப்பட்டுள்ளன எனவே போட்டோ சேர்த்து செய்தி பிரசுரிக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்     

இதை ஷேர் செய்திடுங்கள்: