முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்சல் விசாரணையில் தலையிட விரும்பவில்லை: பாக்.,

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.12 - பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல்குரு தூக்கிலிடப்பட்டான். அப்சல் குரு பற்றி நடந்த விசாரணை பற்றிய விவகாரத்தில் விரிவாக தலையிட விரும்பவில்லை என்று  பாகிஸ்தான் மிகக் கவனமாகக் கருத்து தெரிவித்துள்ளது.

அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி மசாம்கான் கூறியதாவது:

   அப்சல் குரு விசாரணை தொடர்பாக நான் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதுபற்றி பத்திரிகைகளும், மனித உரிமைக்கழகமும் விவாதித்து வருகின்றன. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து

காஷ்மீரிலுள்ள ஹரியத் தலைவர்கள் மீது கைது, தடுப்புத் காவல்  உள்ளிட்ட நடவடிக்கைகள், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் உள்ளிட்ட அடக்கு முறைகளை இந்திய அரசு எடுத்துள்ளது எங்களுக்கு கவலையளிக்கிறது.

 எனவே ஹரியத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து பாகிஸ்தானிலுள்ள முக்கிய நகரங்களில் காஷ்மீரைச் சேர்ந்த ஜமாத் -உட்- தவா போன்ற இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அப்சல் குருவின் சடலத்தை அவனது குடும்பத்தாரிடம் கொடுக்கக்கோரி, ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்  24 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பாகிஸ்தானிலுள்ளவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago