முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டு சுரேஷ் கொலையாளிகள் ஆஜர் - காவல் நீட்டிப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.12 - போலீஸ்காவல் முடிந்து பொட்டுசுரேஷ் கொலையாளிகள் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வருகிற 25ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பருமான சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ். இவரது வீடு மதுரை சத்யசாயிநகரில் உள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிகாரம் படைத்தவராக வலம் வந்த இவர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைசிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்தமாதம் 31ம் தேதி டிவிஎஸ் நகரில் வைத்து 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 7 பேர் நத்தம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.  சரண் அடைந்த இவர்கள் அனைவரும் மதுரை 4வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 6 நாட்கள் போலீஸ் காவல் கொண்டு செல்லப்பட்டனர்.

   கடந்த 6 நாட்களாக போலீசார் அவர்களை தனித்தனியாக வைத்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் எந்ததகவலையும் சொன்னதாக தெரியவில்லை. மேலும் கொலையாளிகளின் செல்போன் பேச்சுக்களை வைத்து போலீசார் திமுக பிரமுகர் பலரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை எந்ததகவலும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த கொலையில் மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்ததால் 7 பேரையும் போலீசார் நேற்று மாலை 4.30 மணியளவில் மதுரை 4வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 25ம் தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கொலையாளிகள் 7  பேரும் மீண்டும் சேலம் கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago