முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் - இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: ரெய்னா

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 12 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே முதலில் 4 போட்டிக ள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி செ ன்னையில் உள்ள சேப்பாக்கம் மைதா  னத்தில் வரும் 22 -ம் தேதி துவங்குகிறது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்காக 15 பேர் கொ  ண்ட இந்திய அணியை தேர்வுக் குழுவி னர் 10 -ம் தேதி அறிவித்தனர். 

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்டில் இடம் பெற்ற இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 வீரர்கள் நீக்கப்பட்டு 3 வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

துவக்க வீரர் காம்பீர், வேகப் பந்து வீரர் பர்விந்தார் அவன்னா மற்றும் சுழற் பந்து வீரர் பையூஸ் சாவ்லா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ள்ளனர். 

அவர்களுக்குப் பதிலாக, பேட்ஸ்மேன் ஷிகார் தவான், வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் மூத்த சுழ ற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

காம்பீர் கடைசியாக விளையாடிய 10 

டெஸ்டில் 490 ரன்களே சேர்த்துள்ளார். இதன் சராசரி 28.822 ஆகும். மோசமான ஆட்டம் காரணமாக தேர்வுக் குழுவினர் அவரை அதிரடியாக நீக்கியுள்ளனர். 

அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷிகார் தவான் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று உள்ளார். 27 வயதான அவர் இதற்கு முன் பாக சர்வதேச ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டியில் விளையாடி உள்ளார். 

ஹர்பஜன் சிங் இங்கிலாந்திற்கு எதி ரான முதல் 3 டெஸ்டில் விளையாடி னார். மோசமான பந்து வீச்சால் கடை சி டெஸ்டில் நீக்கப்பட்டார். 

தற்போது மீண்டும் அணியில் இடம் பெற்று உள்ளார். 100 -வது டெஸ்டில் விளையாடும் ஆர்வத்தில் அவர் இருக் கிறார். அவர் 99 டெஸ்டில் 408 விக்கெ ட் கைப்பற்றியுள்ளார். 

புதுமுக வீரரான புவனேஷ்வர் குமார் ஒரு நாள் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் அடிப்படையில் டெஸ்ட் அணியில் முதன் முறையாக இடம் பெ ற்று இருக்கிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரெய்னா இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்ப ட்டது. ஆனால் தேர்வுக் குழுவினர் வா   ய்ப்பு தர மறுத்து விட்டனர். சமீபத்தில் நடைபெற்ற இராணி கோப்பை போட்டியில் முதல் இன்னிங்சில் சதமும் (134 ரன்), 2-வது இன்னிங்சில் 71 ரன்னும்  எடுத்தார். 

இதனால் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரெய்னா இருந்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது அவரு க்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இது தொடர்பாக ரெய்னா கூறியதாவ து - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத ல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிற து. எதற்காக வாய்ப்பு அளிக்கப்படவி ல்லை என்று தெரியவில்லை.  இதனா ல் நான் மனம் தளர்ந்து விடவில்லை. வலிமையாகவே இருக்கிறேன். இவ் வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago