முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 போக்குவரத்து மண்டலங்களுக்கு இடையே கபாடி போட்டி

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.12 - முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 21 போக்குவரத்து மண்டலங்களுக்கு  இடையே நடந்த போட்டியில் வீரர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 65 வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 21 மண்டலங்களுக்கு இடையே கபாடி போட்டி நடக்கிறது. இந்த போட்டி இரண்டாம் ஆண்டு நடக்கிறது. நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை மூன்று  நாட்கள் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 

4 குழுக்களாக இந்த போட்டி 21 அணி மோதுகிறது. இந்த கபாடி போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்  பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். 

3 நாட்கள் நடைபெறும் கபாடி போட்டி நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. 

இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். 2 நாள் நடைபெற்ற போட்டியில் மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பேரவை செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், பொருளாளர் பழனி, மகேந்திரன் மற்றும் அந்தந்த மாவட்ட தொழிற்சங்க பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 21 மண்டல போக்குவரத்துக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபாடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கேபிள் டி.வி. நிறுவன தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 

நேற்று இரவு 7 மணி வரை விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, வேலூர், திருச்சி, நாகர்கோவில், காஞ்சிபுரம், திருப்பூர், திருநெல்வேலி, தருமபுரி ஆகிய மண்டலங்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. 

இன்று 4 குரூப் அணிகளும், அரை இறுதி, மூன்றாம் இடத்திற்கான போட்டியும், இறுதி போட்டியும் நடைபெறுகிறது. 

வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்படும். வெற்றி பெறும்  அணிக்கு முதல் பரிசாக 65 கிராம் தங்கப் பதக்கமும், இரண்டாவது பரிசாக 40 கிராம் தங்கப் பதக்கமும், மூன்றாவது பரிசாக 25 கிராம் தங்கப் பதக்கமும் வழங்கப்படும். முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த பதக்கம் அணி வீரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.   கபாடி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago