முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20: நியூசிலாந்து 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹாமில்டன், பிப். 13 - இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 2-வது டி - 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில், கேப்டன் மெக்குல்லம் அபா ரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். துவக்க வீரர்கள் அவருக்கு பக்க பலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, பிராங்ளி ன் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக பட்லர், மெக்ளேனகன் மற் றும் எல். மெக்குல்லம் ஆகியோர் பந்து வீசினர். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2- வது டி - 20 போட்டி ஹாமில்டன் நகரில் உள்ள செட்டன் பார்க்கில் பகலிரவு ஆட்ட மாக நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி நன்கு ஆடி ரன்னைக் குவித்தது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்னைக் குவித்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பொறுப்புடன் ஆடி 38 பந்தில் 74 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம்.

தவிர, துவக்க வீரர் குப்டில் 31 பந்தில் 47 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்று ம் 2 சிக்சர் அடக்கம். ரூதர்போர்ட்டு 27 பந்தில் 40 ரன் எடுத்தார். இதில் 1 பவு ண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். 

இங்கிலாந்து அணி சார்பில், டெர்ன் பேச் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ரைட் 2 விக்கெட்டை யும், டிரட்வெல் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 193 ரன்னைஎடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை நியூசிலாந்து அணி வைத்தது. அடு த்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2 -வது போட்டியில் நியூசிலாந்து அணி 55 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கீப்பர் பட்லர் மற்றும் டிரட்வெல் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். முன்வரிசை வீரர்க ள் நிலை குலைந்ததால் அந்த அணி தோல்வியை தழுவியது. 

கீப்பர் பட்லர் அதிகபட்சமாக, 30 பந்தி ல் 54 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, பின்வ ரிசை வீரரான டிரட் வெல் 22 ரன்னும், லம்ப் 17 ரன்னும், மார்கன் 13 ரன்னையு ம் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், பிராங்ளின் 15 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடு த்தார். தவிர, மெக்ளினகன் மற்றும் எல். மெக்குல்லம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக பி.மெக்குல்லம் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்