முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாடிகன்சிட்டி,பிப்.13 - முதுமை காரணமாக வரும் 28-ம் தேதி பதவி விலக போப் பெனடிக்ட் முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய போப்பை தேதர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியா வைச் சேர்ந்தவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிய வரும். 

உலகம் முழுவதிலும் இருந்து 120 கார்டினல்கள் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பர். அவர்களில் இந்தியாவைச்சேர்ந்த 4 கார்டினல்கள் ஓட்டளிக்கவுள்ளனர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் அலன்சேரி, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பசிலியோஸ் கிளிமிஸ், மும்பையை சேர்ந்த ஆஸ்வல்ட் கிரேசியஸ், ராஞஞ்சியைச் சேர்ந்த டெலஸ்போர் டோப்போ ஆகிய 4 இந்தியர்கள் 120 கார்டினல்கள் அடங்குவர். புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகமுழுவதிலும் இருந்து கார்டினல்கள் வாடிகனுக்கு வரத்துவங்கியுள்ளனர்.புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் பணி ரகசியமாகவே நடக்கும். இது சில நாட்கள் நடக்கும். அதன்பிறகு புதிய போப் யார் என்பது அறிவிக்கப்படும். புதிய போப் பதவிக்கு இந்தியாவைச் சேர்ந்தவர் உட்பட பல பெயர்கள் கூறப்படுகின்றன. இருந்தாலும் பிரேசிலைச் சேர்ந்த கார்டினல் ஜோபிரஸ் டி அவிஸ், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச் பிஜப் சயோ பவுலோ ஒடிலோ செரர், அர்ஜெண்டினாவை சேர்ந்த கார்டினல் லியானார்டோ சண்ரி ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

உலகமுழுவதிலும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருப்பவர் போப் ஆண்டவர். கடந்த 2005-ம் ஆண்டு இரண்டாம் ஜான்பால் இறந்த பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசப் அலாய்சியஸ் ராட்சிங்கர் என்பவரை புதிய போப்பாக தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு அவர் 16-ம் பெனடிக் என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago