முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் மறுப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      வர்த்தகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப். 12 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப்  அலி சர்தாரி மீது சுவிஸ்வங்கியில் பண முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் எழுந்தது. இதை முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2007 ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். அவர் பதவி விலகி 2 ஆண்டுகள் கழித்து இப்புகாரை நீக்கியது தவறு. எனவே இவற்றை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் சர்தாரியின் ஊழல் குறித்து சுவிஸ் வங்கிகளிடம் இருந்தும் அந்நாட்டு அரசிடம் இருந்தும் அறிக்கை பெற வேண்டும் என்று பிரதமருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் கிலானி பதவி விலகினார். அவரை தொடர்ந்து பர்வேஸ் அஸ்ரப் பிரதமரானார். அஸ்ரப்பிடமும் சுப்ரீம் கோர்ட் அதே கோரிக்கையை வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த அவர் சுவிஸ் அரசிடம் சர்தாரியின் பண முதலீடு குறித்த விவகாரங்களை கேட்டு பெறுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி சுவிஸ் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது. ஆனால் சர்தாரி மீதான ஊழல் குறித்து விசாரணை அறிக்கை தர முடியாது என சுவிட்சர்லாந்து மறுத்து விட்டது. சர்வதேச சட்டப்படி அதிபர் பதவியில் இருப்பவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த முடியாது. இது போன்ற விசாரணையில் அவர் விதிவிலக்கு பெற்றுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகியதும் அறிக்கை தருகிறோம் என சுவிஸ் அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலை மக்கள் கட்சியின் சட்ட நிபுணர் குழு உறுப்பினர் பவாத்சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசு மற்றும் நீதித்துறை இடையே மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago