வினோதினி மரணம் நெஞ்சைக் கலங்க வைக்கிறது: பாண்டியன்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - விநோதினியின் மரணம் நெஞ்சைக் கலங்க வைக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது:

மிக சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தன்னம்பிக்கையுடன், கல்வி கற்று பணியிலும் சேர்ந்துள்ளார். ஆசிட் ஊற்றப்பட்டு, 90 நாட்கள் உயிருடன் போராடி நிகழ்ந்துள்ள இந்த மரணம் நாகரீக சமூகத்தை வெட்கி தலைகுனிய வைக்கும் செயல், இதனை வன்மையாக கண்டிப்பதுடன், மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். வினோதினியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: