முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுறுத்தல் வழக்கில் சஞ்சய் தத் ஆஜராக கோர்ட்டு சம்மன்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை,பிப்.14 - அச்சுறுத்தல் வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வருகின்ற மார்ச் 1-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் சஹீல் நூரணி என்பவர் ஜான் கி பாஜி என்ற இந்தி படத்தை தயாரித்தார். இதில் சஞ்சய் தத் நடித்தார். படம் எடுக்கும்போது தயாரிப்பாளர் சஹூலுக்கும் சஞ்சய் தத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படம் தயாரிப்பதை சஹூல் பாதிலேயே நிறுத்திவிட்டார். ஆனால் சஹூல் கொடுத்த பணம் ரூ.50 லட்சத்தை திருப்பிக்கொடுக்க தத் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் பிரபல மும்பை தாதாவும் பாகிஸ்தானில் உலாவிக்கொண்டியிருப்பவருமான தீவிரவாத கும்பல் தலைவன் தாவூத் இப்ராகீம் தன்னை மிரட்டியதாகவும் இதற்கு சஞ்சய் தத்துதான் காரணம் என்றும் மும்பையில் உள்ள மெட்ரோபாலியன் கோர்ட்டில் சஹீல் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோர்ட்டில் ஆஜராகி கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு தத்துக்கு உத்தரவிட்டார். மேலும் வருகின்ற மார்ச் 1-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார். 

ஜான் கி பாஜி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் தமக்கு தத் நஷ்டஈடு கொடுக்கக்கோரி இந்தியன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நூரணி புகார் செய்தார். இதை விசாரித்த சங்கம் நூரணிக்கு ரூ.2 கோடி கொடுக்குமாறு த்துக்கு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு தத் மறுத்துவிட்டார். உடனே மும்பை ஐகோர்ட்டில் நூரணி வழக்கு தொடர்ந்தார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டபடி தமக்கு தத் ரூ. 2 கோடி கொடுக்க உத்தரவிட வேண்டும் நூரணி கோரியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, தத் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நூரணிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன. இதை விசாரித்தபோது துபாய், கராச்சி ஆகிய இடங்களில் இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் இந்த மிரட்டலை விடும்படி தாவூத் இப்ராகீமை சஞ்சய் தத் கேட்டுக்கொண்டியிருக்கலாம் என்று கூறி மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நூரணி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்