முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டுசுரேஷ் கொலை: அட்டாக் பாண்டி மனைவியிடம் விசாரணை

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.14 - பொட்டுசுரேஷ்  கொலை வழக்கு தொடர்பாக அட்டாக் பாண்டி எங்கு  இருக்கிறார் என்பது குறித்து  அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ் கடந்த மாதம் 31ம் தேதி 7பேர் கொண்ட கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நத்தம் கோர்ட்டில் மதுரை கீரைத்துயையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், ஆசாமுருகன், செந்தில், லிங்கம், சேகர், கார்த்திக் ஆகிய 7 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இவர்களை மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவல் எடுத்து விசாரிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் 7 பேரும் மீண்டும் கடந்த திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

   இந்த நிலையில் திமுக பிரமுகரும், பிரபல ரவுடியுமான அட்டாக் பாண்டி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடிவந்தனர். இதுகுறித்த தகவல் தெரிந்த அட்டாக் பாண்டி தலைமறைவாகிவிட்டார்.இதை தொடர்ந்து போலீசார் அட்டாக் பாண்டியின் வீட்டில் சோதனைநடத்தினர். அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு, அவரது சகோதரி அம்மாபொன்னு, உறவினர்கள் கார்த்திக், முருகன், பாண்டி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அட்டாக் பாண்டியின் மனைவியிடம் போலீசார் துருவி,துருவி விசாரணை நடத்தினர். அப்போது அட்டாக் பாண்டி எங்கு இருக்கிறார் என்று தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் அட்டாக் பாண்டியை பல்வேறு பகுதிகளில் தேடி வருகிறார்கள். அவரது செல்போனையும் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையில் அட்டாக் பாண்டி இன்று அல்லது நாளை தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடையலாம் என்ற  நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago