முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டுசுரேஷ் கொலை: குற்றவாளிகள் சேலம் கோர்ட்டில் சரண்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சேலம் பிப்.14 - மதுரையில் பிரபல தி.மு.க பிரமுகரும் மத்திய அமைச்சரின் நெருங்கிய நண்பராக இருந்தவருமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விஜயபாண்டியன், ஆரோக்கியபாபு ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர்

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினரும்  மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவராக  இருந்தவர் சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் இவர் கடந்த தி.மு.க ஆட்சியின் போது தென் மாவட்டங்களில் மு.க அழகிரிக்கு அடுத்தபடியாக  அதிகாரமையமாக திகழ்ந்தார்.பின்னர் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளைம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் இவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் இந்த வழக்கில் இருந்து  ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி தனது பணிகளை கவனித்து வந்தார். 

மதுரையில் பிரபல ரவுடியாக திகழ்ந்தவர் அட்டாக் பாண்டி இவருக்கும் பொட்டு சுரேஷ்க்கும் உரசல் போக்கு இருந்துவந்தது. அ.தி.மு. ஆட்சியில் இவர்களது மோதல் வெளிப்படையாக தெரியவந்தது. 

இந்நிலையில்  கடந்த 31 ம் தேதி மதுரை சத்யாசாயி நகரில் உள்ள  தனது வீட்டில் வீட்டில் இருந்து பொட்டு சுரேஷ் காரில் சென்ற போது டி.வி.எஸ் நகரில் வைத்து மர்ம கும்பல் ஒன்று இவரை  வெட்டி கொலை செய்தனர். 

இது குறித்து மதுரை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 7 பேர் நத்தம் கோர்ட்டில் சரணடைந்தனர்.  சரணடைந்த அனைவரும் மதுரை 4 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில்  ஆஜர் படுத்தப்பட்டு 6 நாட்கள் போலீஸ் காவல் கொண்டு செல்லப்பட்டு போலீசார் அவர்களை தனித்தனியாக வைத்து விசாரித்தனர். பின்னர் இவர்கள் 7 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலையாளிகளின் செல்போன் பேச்சுக்களை வைத்து தி.மு.க பிரமுகர் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இதில் மிகவும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் அட்டாக் பாண்டி, விஜயபாண்டியன், ஆரோக்கியபாபு, இவர்களை போலீசார்  பல இடங்களில் தேடிவந்தனர். இதில் விஜயபாண்டியன் (26) அட்டாக் பாண்டியின் சகோதிரியின் மகன் மேலும் இவர் இந்த கொலை வழக்கில் மூலையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து  முக்கிய குற்றவாளிகளா கருதப்பட்ட விஜயபாண்டியன்(26) ஆரோக்கியபாபு(29) இவர்கள் இருவரும் நேற்று சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரித்த ஜட்ஜ் ரப்பி இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

இதனையடுத்து இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

சேலம் கோர்ட்டில் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சரணடைந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்