முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா கலவரத்தில் - 300 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

டிரிபோலி,பிப்.22 - லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முபாமர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. இது நேற்று 6 வது நாள் போராட்டமாகும். தலைநகர் டிரிபோலி, பென்காசி உள்ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் தவிர கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் குதிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்கள் பெரும்பலானோர் உயிரிழந்து வருகின்றனர். தலைநகர் டிரிபோலிக்கு அடுத்தபடியான பெரிய நகரான பென்காசியில் கலவரத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மீது விமானத்தில் பறந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மனித உரிமை கமிஸன் தெரிவித்துள்ளது. இதனிடையே அங்கு நடைபெறும் போராட்ட செய்திகளை பத்திரிக்கையாளர்களால் சுதந்திரமாக சேகரிக்க முடியவில்லை. போராட்டத்தை ஒடுக்கியே தீருவோம் என கடாபியின் மூத்த மகன் ஷாகித் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். டெலிவிஷனில் அவர் பேசும் போது, லிபியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். லிபியாவை உடைத்து குட்டி நாடுகளாக மாற்றுவதற்கு சதி நடக்கிறது. அப்படி நடந்தால் வெளிநாட்டு நிதியுதவி கிடைக்காது. இதனால் நாட்டின் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்