முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரென்கே செஸ்: ஆனந்த்-ஆடம்ஸ் 6-வது சுற்றில் பரிட்சை

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெடன் பெடன், பிப். 14 - ஜெர்மனியில் நடைபெற்று வரும் கிரென்கே சர்வதேச செஸ் போட்டியின் 6- வது சுற்றில் உலக சாம்பியனான விஸ் வநாதன் ஆனந்தும், இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆடம்சும் மோத உள்ளனர். கிரென்கே சர்வதேச செஸ் போட்டி ஜெர்மனியில் கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வரு கிறது. இந்தப் போட்டி தற்போது விறு விறுப்பான கட்டத்தில் உள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற 6 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் களத்தில் குதித்து உள்ளனர்.  

மொத்தம் 10 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் பாதி முடி வடைந்து விட்டது. நேற்று ஓய்வு நா ளாகும். இன்று நடக்க இருக்கும் 6-வது சுற்றில், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆனந்தும், இங்கிலாந்து வீரர் ஆடம்சும் மோதுகின்றனர். 

இதுவரை நடைபெற்ற 5 சுற்று ஆட்டங் களில் இந்திய வீரரான ஆனந்த் அதிக டிரா செய்து இருக்கிறார். எனவே அடு த்த பாதியில் முதலிடம் பெற கவனம் செலுத்தி வருகிறார். 

ஓய்வு நாளான நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் ஆனந்த் ஜெர்மனி வீரர் நைடிட்சை வீழ்த்தினார். முன்பு நடந்த 4 சுற்றுக்களை டிரா செய்தார். இதில் ஜெர்மனி வீரர் பிரிட்மேனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஆனந்த் வெற் றி வாய்ப்பை நழுவவிட்டார். ஆனால் மற்ற  ஆட்டங்களில் கடும் இழுபறி நிலவியதால் சமன் செய்தார். 

முன்னதாக நடந்த முதல் 5 சுற்றில் ஆனந்த் 3 ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் ஆடினார். அடுத்த 5 சுற்றில் அவர் 3 ஆட்டத்தில வெள்ளைக் காய்களுடன் ஆட இருக்கிறார். 

எனவே இதன் மூலம் ஆனந்த் வெற்றி பெற்று முதலிடத்தைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற் காக அவர் ஆயத்தமாகி வருகிறார். 

5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இத்தாலி வீரரான பேபியானோ கரு வானா அதிக புள்ளிகள் பெற்று பட்டிய லில் முதலிடத்தில் இருக்கிறார். 

கடந்த மாதம் நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடந்தது. இதில் இத்தாலி வீரர் கருவானா மோசமாக ஆடினார். 

தற்போது அவர் அதிலிருந்து மீண்டு சிறப்பாக ஆடி வருகிறார். இதனால் அவ ர் முதலிடத்தில் உள்ளார். அவர் 3.5 புள் ளிகள் பெற்று இந்த இடத்தைப் பிடித்து உள்ளார்.  

இந்திய வீரர் ஆனந்த் 3 புள்ளியுடன் 2- வது இடத்திலும், ஜெர்மனியைச் சேர்ந் த நைடிட்ச் மற்றும் பிரிட்மேன் இருவ ரும் தலா 2.5 புள்ளிடன் இணைந்த 3- வது இடத்திலும் உள்ளனர். 

இங்கிலாந்து மாஸ்டரான மைக்கேல் ஆடம்ஸ் 2 புள்ளியுடன்  4- வது இடத் தில் இருக்கிறார். ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜியார்க் மெயர் 1.5 புள் ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். 

இங்கிலாந்து வீரரான ஆடம்ஸ் ஆனந்தி ற்கு கடும் சவாலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வெல் லும் பட்சத்தில் ஆனந்த் பட்டம் வெல் ல வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago