முதல்வர் பிறந்தநாள்: ஓ.பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி முருகனுக்கு அபிஷேக ஆராதனையும்,  தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. மூலவர் சுவாமி வழிபாடு முடிந்த பின்னர் உற்சவிக்கிரகத்தை தங்க ரதத்தில் நிறுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

அதன்பின்னர் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை மேயர் சைதை துரைசாமி, வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் தங்கத்தேரை இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, சி.ஆர்.சரஸ்வதி, பகுதிச்செயலாளர் ஏழுமலை, அண்ணாநகர் பகுதி செயலாளர் வெங்கடேஷன், தி.நகர் சத்யா, மகளிர் அணி நிர்வாகிகள் பத்மினி, கெளசல்யா, இளவரசி, ஜீவா, செல்வி, தமிழரசி, சரசு, உஷா, பங்காரு, சரோஜா உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: