அரசின் ரூ.800 கோடி பங்கு பத்திரங்கள் ஏலத்தில் விற்பனை

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - மொத்தம் ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த பிணையப் பத்திரங்கள் ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப் 18, 2013 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் பிப் 18, 2013  அன்று சமர்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: