முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 16 - அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் குருத்வாராவிலும், பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகினர். இதையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து ஒபாமா பேசியதாவது, 

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் புதிதாக 60 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தனிநபர் வருமானம் மேலும் 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி அளிப்பது குற்றங்களை தடுக்க உதவும். 

ரஷ்யாவுடனான உறவு மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வட கொரியா 3 வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் வட கொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்