முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை: இயக்குனர் ரமேஷ்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.17 - உண்மை சம்பவங்களை படமாக்க படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை என்று வனயுத்தம் பட இயக்குனர் ரமேஷ் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு சந்தனவீரப்பன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் வனயுத்தம் இதில் அர்ஜூன் கிஷோர், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதை அனுமதிக்க மாட்டேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு நஷ்டஈடாக 25 லட்சம் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வனயுத்தம் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டுயிருக்கிறது ஆனால் நீதிமன்றம் சொன்ன பணத்தை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் முத்துலட்சுமியால் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது.

வனயுத்தம் பட விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அசை செய்ய நான் கடமைப்பட்டுயிருக்கிறேன். 25 லட்சத்திற்கான கோர்ட் ஆர்டர் இன்னும் என் கைக்கு வரவில்லை. தற்போது நண்பர்களிடம் கடன் வாங்கி முத்துலட்சுமி அம்மாவிற்கு 10 லட்சம் தருகிறேன். பாக்கி பணத்தை கொடுக்க பத்து நாள் அவகாசம் கேட்கிறேன். இதற்கு அந்த அம்மா சம்மதிக்கு மறுக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து நஷ்டப்பட்டிருக்கிறேன். அதற்கு என் இரண்டு வீடுகளை விற்றேன். இப்போது வீட்டை விற்றுதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். வனயுத்தம் ஏகப்பட்ட பிரச்சனை சந்தித்து நேற்று தான் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்னும் கலெக்ஷன் பணம் என் கைக்கு வரவில்லை.

இந்த அம்மா என்னை மிகவும் நஷ்டப்படுத்தியது. கோர்ட்டில் என்னை அடிக்க வந்தார் என் பாதுகாப்பிற்கு எப்போதும் பத்து போலீஸ் இருக்கும். ஒன்னரை கோடி நஷ்டயீடு கேட்டது. கோர்ட் பார்த்து தீர்மானித்தது தான் இந்த தொகை படத்தில் 32 இடங்களில் கட் செய்ய சொன்னது. பிறகு நான்கு இடங்களில் கட் செய்தேன். வீரப்பனுடன் திருமணம் செய்த காட்சியையும், அந்தம்மாவுடைய போர்ஷனையும் நீக்க சொன்னது. அதை அப்படியே நீக்கி விட்டேன். இப்படி பிரச்சனை என்றால்  பெங்களூரிலும் படம் வெளியானது. அங்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டு போலீஸை பெருமை படுத்தியிருக்கிறார் கன்னட போலீஸ் தலைவர்களை கேவளப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார் மனைவி கதறி அழும் காட்சிகள் இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்லி பிரச்சனை கிளப்புகிறார்கள். நான் கற்பனையாக எதையும் எடுக்கவில்லை நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கினேன். அப்படி படமாக்கும் போது படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை. போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கொடுத்த விபரங்களை வைத்துதான் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் எப்படி பொய் இருக்க முடியும். அதுமட்டுமல்ல தற்போது வீரப்பன் கூட்டாளிகள் தூக்கில் போட இருப்பவர்களை ஜெயிலில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அவர் சொன்ன விஷயங்களையும் படமாக்கி உள்ளேன். முத்துலட்சுமி பெங்களூரில் வெளிவரும் லாங் வேஜ் என்ற பத்திரிகையில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்திருக்கிறது. என்னை பல சமயங்களில் பலர் மிரட்டுகிறார்கள். இந்த படம் வெளி வந்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதிப்பு வரும் என்று சொன்னவர் இப்போது பணத்திலேயே குறியாக இருக்கிறார். இவருக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு தற்போது நீக்கி உள்ள காட்சிகளை மறுபடியும் சேர்த்து தணிக்கை செய்து படத்தை ஓட்டுவேன். முஸ்லீம்களை கேலி செய்திருப்பதாகவும் முத்துலட்சுமி கூறி வருகிறார். இது தவறான பிரச்சாரம் ஒரு படைப்பாளிக்கு உள்ள மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை. குறிப்பாக மற்ற மீடியாக்களை விட சினிமாவுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது வேந்தர் மூவிஸ் சிவா, பட ஒளிப்பதிவாளர், என பலர் அருகில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்