முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கும் பழங்குடி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஷில்லாங், பிப். 17 - காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கும், பழங்குடி அமைப்புகளுக்கும் கூடுதல் ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, 

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மேகாலயா மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக நாட்டில் வேகமான வளர்ச்சி பாதையில் செல்லும் மாநிலமாக மேகாலயா திகழ்கிறது. 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கும், பழங்குடி அமைப்புகளுக்கும் கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே அது எந்த அளவுக்கு மேகாலயாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago