முக்கிய செய்திகள்

ஜனாதிபதி உரையில் புதிதாக ஒன்றுமில்லை - எதிர்க்கட்சிகள் கருத்து

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
bjpflag

 

புது டெல்லி,பிப்.22- பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி பிரதீபா உரையாற்றினார். இந்த உரை பற்றி எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. 

லோக்சபையின் தெலுங்குதேச தலைவர் நமோநாகேஸ்வரராவ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர் ஜனாதிபதி உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. இது பழைய உரைதான். அதைத்தான் திரும்ப வாசித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு முயற்சி செய்ததாக காட்டிக் கொள்வதற்கு இந்த உரையில் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க எந்த நடவடிக்கையும் இதில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். பாரதீய ஜனதாவும் இந்த உரையை குற்றம் சாட்டியுள்ளது. கறுப்பு பணம், ஊழல், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு இதில் எந்த தீர்வும் இல்லை என்று எஸ்.எஸ். அலுவாலியா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: