முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் குடியேறியுள்ள 25 லட்சம் தொழிலாளர்கள்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,பிப்.17 - கேரளாவுக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த 25 லட்சம் தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவர்கள் வருடத்திற்கு சுமார் 17 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். 

கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். அரபு நாடுகள் மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ள கேரள மக்களின் எண்ணிக்கை 25 லட்சம் பேர் என்று கூறப்படுகிறது. தற்போது இதே அளவுக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த குறிப்பாக மேற்குவங்காளம், ஒரிசா, அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிகமான தொழிலாளர்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கட்டுமான பணியில்தான் ஈடுபட்டுள்ளனர். 60 சதவீதம் பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். மீதப்பேர் ஹோட்டல்கள், தேயிலை, ஏலத்தோட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளில் பணிபரிகிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் 10 ஆண்டுகளில் 4.8 லட்சமாக உயரலாம் என்று தெரிகிறது. தற்போது இவர்கள் தினமும் தலா ரூ.300 வரை சம்பளம் பெறுகிறார்கள். வருடத்திற்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 35 வயதுடையவர்களாகவும் தனியாகவும் வந்துள்ளனர். 25 லட்சம் பேரில் பெரும்பாலும் கட்டுமானப்பணியில்

ஈடுபட்டுள்ளார்கள் என்று சட்டசபையில் நேற்று மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபி ஜான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago