முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணை விபரத்தை தர முடியாது: இத்தாலி கோர்ட்டு

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.17 - ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு விசாரணை விபரத்தை தரமுடியாது என்று இத்தாலி கோர்ட்டு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி, பிரதமர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக பிரயாணம் செய்வதற்காக இத்தாலி நாட்டில் உள்ள பின்மெக்கானிக் கம்பெனியின் துணைநிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற கம்பெனியுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியர்களுக்கு ரூ.362 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பான வழக்கு இத்தாலியில் உள்ள பூர்வாங்க விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணையில் லஞ்சம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையொட்டி பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் திட்ட தலைவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சினையானது இந்தியாவில் பெரும் பூகம்பத்தை எழுப்பியுள்ளது. இதனையொட்டி விசாரணை விபரத்தை தரும்படி கோர்ட்டியிடம் மத்திய அரசு கேட்டியிருந்தது. இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இது கேட்கப்பட்டது. இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை விபரத்தை இந்தியாவுக்கு அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டது. விசாரணையின் விபரம் வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்று இந்திய தூதரகத்தில் கோர்ட்டு நீதிபதி தெரிவித்துவிட்டார். அதேசமயத்தில் ரகசிய விசாரணை முடிந்த பின்னர் இந்தியா புதியதாக வேண்டுகோள் விடுத்தால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக முழு பரத்தை அறிந்து வர விமானப்படை கொள்முதல் மேலாளர் அருண்குமார் பால் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்