போபால் விஷ வாயு வழக்கு - சி.பி.ஐ. மனு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      இந்தியா
CBI 3

புது டெல்லி,ஏப்.22 - போபால் விஷ வாயு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்னை மிகவும் குறைவானது என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ கூறியுள்ளது. கடந்த 1984 ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1996 ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி ஆஜரானார். தீர்வு கிடைக்காத ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாபெரும் குற்றம் இழைக்கப்பட்ட நிலையில் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு அமைந்திருக்கிறது எனஅறு வாஹன்வதி கூறினார். 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது சி.பி.ஐ. யின் தவறுதான். 

ஆனால் இந்த தாமதத்தை காரணம் காட்டி நீதியை மறுக்கக் கூடாது. தவறுக்கு ஏற்ற தண்டனைதான் வழங்கப்பட வேண்டும் என்பது நீதிபரிபாலனத்தின் அடிப்படை கொள்கை என்றும் அவர் கூறினார். 

போபால் விஷ வாயு வழக்கில் தெரிந்தே பலருக்கு மரணத்தை விளைவிப்பது என்கிற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது பின்னர் நடவடிக்கை எடுக்க தவறியதால் ஏற்பட்ட சாவு என்கிற சட்டப் பிரிவுக்கு குற்றச்சாட்டு மாற்றப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைத்தது. பழைய சட்டப் பிரிவுக்கே குற்றச்சாட்டை மாற்ற வேண்டும் என்று சி.பி.ஐ. தனது மனுவில் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: