முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2,171 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் கமிஷன் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.18 - பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டபோது தங்களுக்கு ஏற்பட்ட தேர்தல் செலவு விபரங்களை தாக்கல் செய்ய தவறியதாக 2171 வேட்பாளர்களை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்துள்ளது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் பணபலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. 

இவ்வாறு தகுதிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அதாவது 2016 ஜனவரி வரை இந்த வேட்பாளர்களுக்கு இந்த தடை பொருந்தும். தேர்தல் சீர்திருத்தங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதிநீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களில் மராட்டிய மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அங்கு 260 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கரில் 259 வேட்பாளர்களும் அரியானாவில் 197 வேட்பாளர்களும் ஒரிசாவில் 188, மத்தியப்பிரதேசத்தில் 179 வேட்பாளர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் 159 வேட்பாளர்களும் ஜார்க்கண்டில் 118 வேட்பாளர்களும் தமிழ்நாட்டில் 97 வேட்பாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவிகளின் கீழ் இந்த வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாகவே 2171 வேட்பாளர்களை தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்து அதிடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்