முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு காவிரி நீரை தரவே இயலாது: ஷெட்டர்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஹூப்ளி, பிப். 19 - தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை தர இயலாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்று கடந்த 7 ம் தேதி கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவை மதித்து உரிய நீரை உடனடியாக கர்நாடகம் திறந்து விடும் என்று தமிழகம் எதிர்பார்த்தது. ஆனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. அந்த தண்ணீரும் தமிழக எல்லைக்கு வர 5 நாட்களானது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதால் கர்நாடக முதல்வர் உட்பட 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

இந்த நிலையில் ஹூப்ளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறியதாவது, 

கர்நாடகத்திடம் தண்ணீரே இல்லாத போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். இதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கடந்த 40 ஆண்டுகளாக காவிரி விவகாரத்தில் கர்நாடகம் சட்ட ரீதியாக போராடி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கறிஞர் பாலிநாரிமன் சிறப்பாக வாதாடி வருகிறார். பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ள அவருக்கு அதிகளவில் அனுபவம் உள்ளது. அதை காவிரி விவகாரத்திலும் பயன்படுத்துவார் என நம்புகிறேன். எனவே அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எடுத்துக் கூற கர்நாடக அனைத்து கட்சி குழுவினர் பிரதமரை நேற்று சந்தித்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago