முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு விசாரணை: நாடாளுமன்ற கூட்டுக்குழு கவலை

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - 2 ஜி அலைக்கற்றை வழக்குகளில் சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணை நத்தை வேகத்தில் நகர்வதாக நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இக்குழு முன்பாக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா ஆஜரானார். அப்போது இந்த விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளின் நிலவரத்தை அவர் உறுப்பினர்கள் முன்பு விளக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக தகவல் கேட்டு பல்வேறு நாடுகளுக்கு நீதிமன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இவை அந்நாடுகளில் நடந்த பண பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அந்நாட்டு நீதிமன்றம் மூலமாக விசாரிக்க கேட்டுக் கொள்ளும் கடிதங்களாகும். அந்த நாடுகளில் நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் பற்றிய முழு விவரங்கள் கிடைத்தால்தான் குற்றம் நடைபெற்றதை நிரூபிப்பது சாத்தியமாகும். இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்டன. ஆனால் வெளிநாடுகளில் விசாரணை இன்னும் முடியவில்லை. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியா, பிரிட்டன், மொரீஷியஸ், பெர்முடா ஆகிய நாடுகளில் வழக்கு குறித்த விவரங்களை விசாரித்து அறிக்கை அளிக்க கோரி நீதிமன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அலைக்கற்றை உரிமங்கள் பெற்ற சில நிறுவனங்களின் முதலீட்டுக்கான நிதி எங்கிருந்து வந்தது போன்ற விவரங்களை பெற வேண்டியதுள்ளது. அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றின் உதவியுடன் இந்த விஷயம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்நாடுகளிடம் இருந்து பதில் கிடைத்தால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிட்டும். 

பிரிட்டன், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து சில விவரங்களை கேட்டிருந்தன. அவற்றை அளித்து விட்டோம். மலேசியா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம். சி.பி.ஐ. அதிகாரிகள் இது வரை இரண்டு முறை மலேசியா சென்று தொடர் விசாரணை நடத்தியுள்ளநர். பிரிட்டன், பெர்முடா ஆகிய நாடுகள் தங்களது விசாரணையில் ஒரு பகுதியை கூட முடித்து விட்டதாக தெரிகிறது. முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 

நிறுவனங்களின் தகுதிக்கு மீறி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட ஜே.பி.சி. உறுப்பினர்கள் விசாரணையின் போக்கில் அதிருப்தி தெரிவித்தனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் நடைபெற்று வரும் விசாரணை நத்தை வேகத்தில் நகர்வதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago