முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் புயல் வீசும்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - இந்த வாரம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அமளி நிரம்பியதாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் வியாழக் கிழமை தொடங்குகிறது. இம்மாதம் 26 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் பொருளாதார ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நிதயமைச்ர் ப. சிதம்பரம் பொது பட்ஜெட்டை 28 ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். 

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமை கொறடாக்கள் கூட்டத்தை நடத்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம் இந்த கூட்டத் தொடரில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் உத்தியை வகுப்பதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டமும் டெல்லியில் நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத் தொடரில் ஹெலிகாப்டர் பேர ஊழல் உட்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. தவிர, ஊழல், பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகளும் எழுப்பப்படும். காங்கிரஸ் சார்பிலான ஏ.என்.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட விஷயங்களை எதிர்த்து இம்மாதம் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்கள் கொடூரமாக கொன்றது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் பயணிகள் கட்டண உயர்வு, தனித் தெலுங்கானா போன்ற பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago