முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றவாளி ஜான்டேவிட் எங்கே? தனிப்படை வேட்டை

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிதம்பரம், ஏப். 22 - மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறு திப்படுத்தப்பட்ட நிலையில் குற்றவாளி ஜான் டேவிட் எங்கே? என்ப தில் மர்மம் நீடிக்கிறது. 2 தனிப்படையினர் அவரை தேடி வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கடந்த 1996 -ம் ஆண்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சக மாணவர் ஜான்டேவிட் கைதானார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதி த்து கடலூர் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜான் டேவிட் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செ ய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று முன் தினம் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம் ஜான் டேவிட்டுக்கு, கடலூர் செசன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன் அவரை உடனே கைது செய்து கடலூர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தவும் உத்தரவிடப்ப ட்டது. 

இதையடுத்து கடலூர் போலீசார் ஜான் டேவிட்டை பிடிக்க தீவிர தே டுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜான் டேவிட்டின் பெற்றோர் கரூரில் வசித்து வந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஜான் டேவிட்டின் தாய் வேலூர் சென்று விட்டார். 

அவரது தந்தை மட்டும் கரூரில் வசித்து வருகிறார். இங்கு ஏதாவது ஒரு இடத்தில் ஜான் டேவிட் இருக்கக் கூடும் என்று தனிப்படை போ லீசார் கரூர், திருச்சி, சென்னை போன்ற ஊர்களுக்கு சென்று விசார ணை செய்து வருகின்றனர். 

அதே நேரத்தில் ஜான் டேவிட் ஏதாவது வெளிநாட்டுக்கு சென்று இரு க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுத்து வரும் போலீசார் இன்டர் போல் எனப்ப டும் சர்வதேச போலீசாரின் உதவியையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக வும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும், அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகி ன்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்