இத்தாலியில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் அதிர்ந்தன

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

ரோம், பிப். 19 - இத்தாலியின் மையப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அளவாக இருந்தது. இந்த நிலநடுக்கம் 10.7 கி.மீ. ஆழத்தில் உருவானதாக இத்தாலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாரும் காயமடைந்ததாகவோ, கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதால் தேசிய பூங்கா அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: