முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்கண்டேய கட்ஜூ ராஜினாமா செய்ய பா. ஜ போர்க்கொடி

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - காங்கிரஸ் அல்லாத ஆளும் மாநிலங்கள் குறித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, பாரபட்சமான விமர்சனங்களை செய்து வருகிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா போர்க்கொடி உயர்த்தியுள்ளது. 

இது குறித்து பா.ஜ.க மேலிட பிரதிநிதிகளில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ காங்கிரஸ் அல்லாத ஆளும் மாநிலங்கள் குறித்து தவறான அபிப்ராயங்களை தெரிவித்து வருகிறார். அது மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க ஆளும் பீகாராக இருந்தாலும் சரி, குஜராத்தை ஆளும் மோடி அரசாக இருந்தாலும் சரி, இப்படி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி அரசுகளை எல்லாம் கட்ஜூ தவறாக விமர்சித்து வருகிறார். எனவே பாரபட்சமாக செயல்படும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பிரதாப் ரூடி போர்க்கொடி உயர்த்தி உள்ளார். 

இதே போல் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லியும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி போல் இவர் பேசுகிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று அருண்ஜெட்லியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். ஆக, மார்க்கண்டேய கட்ஜூக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்து விட்டனர். தகவல்களை திரித்து கூறுகிறார். எனவே அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்