முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கிறது

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

நகரி, பிப். 19 - ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 6 மாதமாகியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஜெகன் கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் ஆட்சியின் சதி என்று விளக்குவதற்காக அவரது தங்கை ஷர்மிளா ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை தொடங்கினார். தனது தந்தை ராஜசேகர ரெட்டி சமாதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ஷர்மிளா இதுவரை 70 நாட்கள் ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்து நேற்று கொண்டகோலு என்ற கிராமத்தில் நிறைவு செய்தார். 

இந்த பாதயாத்திரையால் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்பளிக்கின்றனர். நேற்று மிடியலகுடா என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவரை காண லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர் காங்கிரஸ் அரசு மற்றும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார். 

ஜெகனை வெளியே விட்டால் ஆட்சியை பிடித்து விடுவார் என்பதால்தான் அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையே ஷர்மிளா கணவர் அனில்குமார் மீது பா.ஜ.கவை சேர்ந்த பிரபாகர் புதிய ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ரட்சனா டி.வி.யை பினாமியில் அனில்குமார் நடத்தி வருகிறார் என்றும், 2004 ல் ஷர்மிளாவின் சொத்துக்கள் ஒன்றரை கோடியாக இருந்தது. தற்போது 100 கோடிக்கு உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்த சொத்து எப்படி சேர்ந்தது என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு நடிகை ரோஜா பதிலளிக்கையில், 

ஷர்மிளாவுக்கு கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து பா.ஜ.க.விற்கு உடல் நடுங்குகிறது. மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாதவர்கள் ஜெகன் குடும்பத்தின் மீது சேற்றை வாரியிறைக்கின்றனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்