முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்சல் குடும்பத்தினரின் கோரிக்கை: நிராகரிக்க முடிவு?

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல்குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்யக் கூடும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கடந்த 9 ம் தேதியன்று அப்சல்குரு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். பின்னர் அவரது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆனால் அப்சல் குருவின் உடலை தங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் அப்சல்குருவின் உடலை தங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். 

இதனிடையே அப்சல் குருவின் உடல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குக் கொண்டுவரப்பட்டு யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டு விட்டதாக ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோல் அப்சல் குரு மற்றும் இதற்கு முன்பு தூக்கிலிடப்பட்ட மக்பூல் பட் ஆகியோரது உடல்களை ஜம்மு காஷ்மீரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது. 

அப்சல்குருவின் உடலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொண்டு சென்றால் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடும் என்பது உள்துறை அமைச்சகத்தின் கருத்தாக இருக்கிறது. இதனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்து ஜம்மு காஷ்மீர் அரசுக்கு விரைவில் மத்திய அரசு தெரிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்