முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைவிமர்சனம் ''வனயுத்தம்''

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.20 - நாயகன் கிஷோர் (வீரப்பன்) தனது கூட்டாளிகளுடன் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் காடுகளில் மறைந்து வாழ்கிறான். காடுகளிலுள்ள சந்தன மரங்களை வெட்டுவது, யானைகளை வேட்டையாடுவது. கர்நாடக பிரமுகர்களை கடத்தி பணம் பறிப்பது. போலீஸ்காரர்களை சுட்டு தள்ளுவது என இவர்களது வேலை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை சுட்டுத்தள்ள தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு காவல்படை கர்நாடகா செல்கிறது. அங்கே நடக்கும் துப்பாக்கி சண்டையில் சாதூர்யமாக வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள். இதுதான் வனயுத்தம் க்ளைமாக்ஸ்.

இதை நாம் சொல்லி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே செய்தி தாழ்கள், தொலைக்காட்சிகளில் வெளியாகி பார்த்து, படித்த விஷயம். ஆனால் அதை சினிமாவில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அற்புதம். குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் பல பேர் வீரப்பனால் குண்டுவைத்து கொல்லப்பட்ட அதே இடத்தில் காட்சிப்படுத்திருப்பது. வீரப்பன் வாழ்ந்த இடம், வனங்கிய தெய்வம், இறுதியாக வீரப்பன் கொல்லப்பட்ட இடம் போன்ற காட்சிகள் நிஜத்தை பிரதிப்பளிக்கிறது.

வழித்து சீவிய தலைமுடி, நீண்ட மூக்கு, கண்ணத்தில் இருபுறமும் உருண்டு திறண்டு இருக்கும் மீசை என துளியும் உருமாற்றம் இல்லாமல் நீஜ வீரப்பனாக தோற்றமளிக்கிறார் கிஷோர். அதோடு மட்டுமல்லாமல் வீரப்பன் பாடிலாங்கவேஜ், நடிப்பு, வசன உச்சரிப்பு அனைத்தும் சூப்பர். வீரப்பனை தேடி போலீஸ் படை வரும்போது அதை மலைமீது  நின்றுபார்த்து வர்றாம்பாடு  ஆம்பிளை என்று தன் கூட்டாளிகளிடம் கூறி மகிழும் வீரப்பனை ரசிக்க வைக்கிறது. மேலும் ராஜ்குமாரை கடத்தி வச்சுகிட்டு தப்பா ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிருங்க என்று மனம் உறுகிநிற்கும் போது நெகிழ வைக்கிறது. இப்படி படத்தில் பல இடங்களில் கிஷோர் நடிப்பை ரசிக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜூன் (விஜயகுமார்) அங்கே நடக்கும் சம்பவங்களை ஆராய்ந்து பார்த்து அதிகம் பேசாமல், தேவைபடும் போது அதற்கு ஏற்ஹார்போல் தன்னையும், அவரது டீம்மையும் தயார்படுத்தி கொள்வது அருமை. இவர்களுடன் சுரேஷ், ஒபாராய், சுலக்ஷனா, ரவிகாலே, அருள்மணி, சம்பத்ராம், ஜெயபாலன், ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஷிகா என அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர்.

அஜயன் பாலாவின் வசனம் கருத்தோட்டமாக உள்ளது. எஸ்.டி.விஜய்மில்டனின்   ஒளிப்பதிவு மேற்கு தொடர்ச்சி மலையை கண்முன் நிறுத்துகிறது. சந்திப்சவுடா இசையில் பின்னணி  காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயக்கம் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தயாரிப்பு அக்ஷயா கிரியேஷன்ஸ் மற்றும் சாய்ஸ்ரீ கிரியேஷன்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago