பதவி விலகும் போப்க்கு மாதம் ரூ.1.81 லட்சம் பென்ஷன்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

வாடிகன், பிப்.20 - உடல் நலக்குறைவு காரணமாக இந்த மாத இறுதியில் பதவி விலகும் போப் 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ. 181,236 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு காரணமாக 16ம் பெனடிக்ட் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அவர் வரும் 28ம் தேதி பதவி விலகுகிறார். வரும் மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்நிலையில் பதவி விலகிய பிறகு 16ம் பெனடிக்டுக்கு மாதாமாதம் ரூ.181,236 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில இத்தாலிய இணையதளங்களில் பெனடிக்ட் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பெனடிக்டின் தேவைகளுக்கு ஆட்களை வாடிகன் நிர்வாகமே அளிக்கும் நிலையில் அவர் இவ்வளவு பணத்தை எப்படி செலவு செய்யப் போகிறார் என்று இணையதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: