சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 21 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.   

4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா​ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22-​ந்தேதி தொடங்குகிறது.

இதில் விளையாடுவதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி நேற்றுமுன்தினம் மாலை சென்னை வந்தது. நேற்று காலை இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உடற்பயிற்சி, வலைப்பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். இதேபோல இந்திய வீரர்கள் கேட்ச் பயிற்சியிலும் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் வீரர்கள் பயிற்சி எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி தனித்தனி குழுவாக ஏற்கனவே சென்னை வந்துவிட்டது. அந்த அணி குருநானக் கல்லூரியில் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டமும், இந்திய ஏ அணியுடன் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டமும் டிராவில் முடிந்தது.பயிற்சி ஆட்டத்துக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்தனர். 

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய வீரர்கள், 11 பேரின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. கட்டை விரலில் காயம் ஏற்பட்டிருந்த பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் குணமடைந்து உள்ளதால் இப்போட்டியில் கலந்துகொள்கிறார். அறிமுக வீரரான ஆல் ரவுண்டர் மோய்செஸ் ஹென்ரிக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளார்.

வீரர்கள் விவரம்:​ மைக்கேல் கிளார்க் (கேப்டன்), எட் கோவன், மோய்செஸ் ஹென்ரிக்ஸ், பில் ஹூக்ஸ், நாதன் லயன், ஜேம்ஸ் பேடின்சன், பீட்டர் சிடில், மிச்செல் ஸ்டார்க், மாத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஷேன் வாட்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: