இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்: வார்னர் பங்கேற்பாரா?

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 21 - இந்திய அணிக்கு எதிராக நடக்க இருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பங்கேற்பாரா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையேயான முதலாவது கிரி க்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 22 -ம் தேதி துவங்க இருக்கிறது. 

இந்தப் போட்டியில் காயம் அடைந்து ள்ள ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான வார்னர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் முடிவாக வில்லை, மர்மம் நீடிக்கிறது. 

துவக்க வீரரான வார்னர் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்திய அணிக்கு எதிரான 2 பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதிலும், வார்னர் முதல் டெ ஸ்டில் பங்கேற்பார் என்று ஆஸ்திரேலி ய அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் நம்பிக்கை தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்க ளில் ஒருவரான டேவிட் வார்னர் தற் போது வளைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் சுழற் பந்துகளை மட்டுமே சந்தித்து வருகிறார். வேகப் பந்து வீச்சை அவர் ஆடவில்லை. 

வார்னர் இந்தப் போட்டிக்கு உடற்தகு தி பெறாவிட்டால், ஆல்ரவுண்டர் ஷே ன் வாட்சன் துவக்க வீரராக களம் இறக் கப்படலாம் என்று தெரிய வருகிறது.

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரரான எட் கோவன் சிறப்பாக ஆடி ரன்னை எடுத்தார். அவ ருக்கு பயிற்சியாளர் ஆர்தர் பாராட்டு தெரிவித்தார். 

இலங்கை அணி சமீபத்தில் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போ   ட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் ஆஸி. அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இந்த உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொ  ண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடை யே 4 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. 

இது குறித்து ஆஸி. பயிற்சியாளர் ஆர்த ரிடம் கேட்ட போது, காயம் அடைந்து ள்ள வார்னர் தற்போது தேறி வருகிறா ர். அவர் முதல் டெஸ்டிற்கு தகுதி பெ றுவார் என்று எதிர்பார்க்கிறோம். 

வார்னர் இந்த டெஸ்டிற்கு தகுதி  பெ றாவிட்டால் ஆல்ரவுண்டர் ஷேன் வா  ட்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வார்னர் தற்போது வளைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்திய அணிக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் துவக்க வீரர் எட்கோவன் நன்றாக ஆடினார். டெஸ்ட் தொடரில் அவருடன், வார்னர் அல்லது வாட்சன் துவக்க வீரர்களாக இறங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: