முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத திட்டம் தொடர்ந்தால் வடகொரியா மீது தடைகள்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

சியோல், பிப். 21 - வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தைதொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரிய அதிபர் மியூங் பக் எச்சரித்துள்ளார். தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை மூலம் மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அது தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். வடகொரியா சமீபத்தில் மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதையடுத்து அதன் மீது ஐ.நா. மேலும் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago