முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: இங்கி., 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

நேப்பியர், பிப். 21 - நியூசிலாந்து அணிக்கு எதிராக நேப்பிய ரில் நடைபெற்ற 2 - வது ஒரு நாள் கிரி க்கெட்  போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொ டர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் குக், டிராட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அபார மாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக பெல் ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன் னணி வேகப் பந்து வீச்சாளாரான ஆண்டர்சன் மற்றும் வோக்ஸ் இருவரும் சிறப்பாக பந்து வீசி 8 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆத ரவாக பிராட் மற்றும் பின் ஆகியோர் பந்து வீசினர். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் பார்க்கில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 269 ரன்னை எடுத்தது. இதில் 1 வீரர் சதமும், 1 வீரர் அரை சதமும் அடித்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 117 பந்தில் 100 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். கேப்டன் பிர ண்டன் மெக்குல்லம் 36 பந்தில் 74 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, வில்லியம்சன் 33 ரன்னையும், எலியட் 23 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 34 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடு த்தார்.  வோக்ஸ் 68 ரன்னைக் கொடுத் து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பிராட் மற்றும் பின் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 270 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை நியூசிலாந்து அணி வைத்தது. அடு த்து களம் இறங்கிய அந்த அணி 47.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 270 ரன் னை எடுத்தது. 

இதனால் இந்த 2 -வது போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில் மிடில் ஆர் டர் பேட்ஸ்மேனான ஜோ ரூட் அதிக பட்சமாக 56 பந்தில் 79 ரன் எடுத்து இறு திவரை ஆட்டம் இழக்காமல் இருந்தா ர். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். கேப்டன் கூக் 92 பந்தில் 78 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, டிராட் 73 பந்தி ல் 65 ரன்னையும், இயான்  பெல் 44 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், வில்லியம் சன் 39 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். செளதீ 54 ரன்னைக் கொடுத் து 1 விக்கெட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்