முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்பஜன் சிங்கிற்கு 100-வது டெஸ்ட்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 22 -  இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழ ற் பந்து வீரரான ஹர்பஜன் சிங் 100 -வ து டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு க்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மை தானத்தில் இன்று துவங்குகிறது. 

ஹர்பஜன் சிங் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்று இருக்கிறார். இதில் அவர் 1 டெஸ்டில்மட்டும் ஆடி இருக்கிறார்.  

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெளி நாட்டுத் தொடரை இந்தியா இழந்தது. இந்தத் தொடரில் ஹர்பஜன் மோசமாக பந்து வீசியதைத் தொடர்ந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

சென்னை டெஸ்ட் போட்டியில் ஹர்ப ஜன் சிங் பங்கேற்கும் பட்சத்தில் இது அவருக்கு 100 -வது டெஸ்டாக இருக் கும். இதில் பங்கேற்க அவர் ஆர்வமாக இருக்கிறார். 

ஹர்பஜன் சிங் இதுவரை 99 டெஸ்டில் விளையாடி 408 விக்கெட்டுகளை வீழ் த்தி இருக்கிறார். இதன் சராசரி 32.27 ஆகும். இதன் ஸ்டிரைக் ரேட் 68.1 ஆகும். 

ஹர்பஜன் சிங் 17 வயதில் ஆஸ்திரேலி ய அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த டெஸ்டின் மூலம் அறிமுகம் ஆனா ர். ஆஸி. அணிக்கு எதிரான போட்டிக ளில் அவர் கணிசமான விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். 

தவிர, அவரது இளமைக் கால ஹீரோக்  களான டெண்டுல்கர், டிராவிட், ஸ்ரீநாத், கும்ப்ளே, லக்ஷ்மண் மற்றும் கங்குலி ஆகியோருடன் அவர் ஆடி இருக்கிறார். 

100 - வது டெஸ்டில் பங்கேற்க இருக்கு ம் அவர் இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி மேலும் 50 போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேட்ட போது, நான் 100 -வது டெஸ்டில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறிது பதட்டத்தை அளித்தாலும், நான் எனது திறமையை மீண்டும் நிரூபிக்க நல்ல வாய்ப்பாகும். 

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக எனக்கு டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கவில் லை. எனவே நான் பந்து வீச்சில் முழுக் கவனத்தையும் செலுத்தி கடுமையாக உழைத்து இருக்கிறேன். தொடர்ந்து அணியில் இடம் பெறும் வகையில் எனது பந்து வீச்சு இருக்கும். எனக்கு ஊக்க த்தையும், ஆக்கத்தையும் தந்து உதவிய மூத்த வீரர்களான டெண்டுல்கர், டிரா விட், லக்ஷ்மண், கங்குலி, கும்ப்ளே மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆதரவால் நான் பல சாத னைகளை படைக்க முடிந்தது. 

மேற்படி மூத்த வீரர்களிடம் இருந்து நான் நல்ல பாடங்களைக் கற்றுக் கொ  ண்டேன். அவர்கள் சிறந்த வீரர்களாக வும், கிரிக்கெட்டின் தூதர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அணியின் வெற்றிக்காக பாடுபட்டனர். கடுமையாக எப்படி உழைக்க வேண்டு ம் என்பதை அவர்கள் நமக்கு நிரூபித்த னர். இதன் மூலம் எந்த சூழலிலும் போட்டிகளில் வெற்றி பெறலாம் என் பதையும் அவர்கள் உணர்த்தினார்கள். மேற்படி வீரர்களுடன் விளையாடியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்