ஹோகிணூர் வைரத்தை திருப்பி தரமாட்டோம்: கேமரூன்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

அமிர்தசரஸ்,பிப்.22 - இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஹோகிணூர் வைரத்தை திருப்பித்தர மாட்டோம் என்று பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டனர். அவைகளில் ஹோகிணூர் வைரமும் ஒன்றாகும். இது உலகத்தில் இருக்கும் பெரிய வைரக்கல்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது இந்த வைரமானது இரண்டாவது பிரிட்டீஷ் இளவரசி மகுடத்தில் உள்ளது. இந்த வைரமானது இந்தியாவின் விலைமிதிப்பற்ற பொருளாகும். அதை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இந்தியாவில் பல முக்கிய பிரமுகர்கள் பிரிட்டீஷை வற்புறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக மும்பையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கடைசி கட்டமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு சென்று அங்கு பொற்கோயிலில் வழிபட்டார். பொற்கோயிலில் கேமரூனுக்கு தலைப்பாகை கட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேமரூன், இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட ஹோகிணூர் வைரத்தை திருப்பித்தர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அமிர்தசரஸ் பொற்கோலின் கற்பகிரக அமைப்பை பார்த்து வியந்துபோன கேம்ரூன், வெகுவாக பாராட்டினார். 105 காரட் தன்மையுள்ள கோஹிணூர் வைரத்தை திருப்பித்தர வேண்டும் என்று இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கோரி வருகிறார்கள். அந்த வைரம் தற்போது லண்டன் டவரில் அலங்கார பொருளாக வைக்கப்பட்டுள்ளது. கோஹிணூர் வைரத்தை திருப்பி கேட்பது சரியான அணுகுமுறை இல்லை என்று கருதுகிறேன். இதேபோல்தான் கிரீக் நாட்டு மார்பிள் சிலைகளையும் திருப்பி தர வேண்டும் என்று கோரப்படுகிறது. அந்த சிலைகள் தற்போது பிரிட்டீஷ் அருங்காட்சியத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அவைகளை திருப்பி கேட்பது உணர்ப்பூர்வமானது அல்ல என்றார்.  அதேசமயத்தில் கடந்த 1919-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாத் படுகொலை சம்பவம் மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாகும். ஹோகிணூர் வைரத்தை கடந்த 1850-ம் ஆண்டு ராணி விக்டோரியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும் கேம்ரூன் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: