சென்னை டெஸ்ட்: சரிவை தடுத்து நிறுத்தினார் சச்சின்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சின் இரண்டாது நாளில் ஆஸ்திரேலியா 380 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களான சேவாக்கும், முரளி விஜயும் நிலைத்து நிற்கவில்லை. இந்திய அணியின் சரிவை நட்சத்திர வீரர் சச்சின் தடுத்து நிறுத்தினார். 

நேற்று முன்தினம் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் வார்னர் 59 ரன்னும், ஹென்றிகியூஸ் 68 ரன்னும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா

 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் கிளார்க் 103 ரன்னிலும், பீட்டர் சிடில் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். நேற்று  2 -வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய முதலே கிளார்க் நிதானமாக விளையாடி வந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்த தோனி பெரும் பாடுபட்டார். முடிவில் சுழல் பந்துவீச்சாளர்  ஜடேஜாவை கொண்டு வந்தது பலன் கிடைத்தது. 130 ரன் எடுத்திருந்த கிளார்க், ஜடேஜா வீசிய பந்தை தூக்கி அடித்தபோது குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பீட்டர் சிடில் 19 ரன்களுக்கு 94 பந்துகள் விளையாடி வெறுப்பேற்றினார். ஜேம்ஸ் பேட்டின்சன் 47 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து மேலும் எரிச்சலூட்டினார் 

இதைத் தொடர்ந்து பீட்டர் சிடில் 19 ரன்னில் ஹர்பஜன் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 100வது டெஸ்ட்டில் விளையாடி வரும் ஹர்பஜனுக்கு ஒரு விக்கெட் கிடத்தது மகிழ்ச்சியான செய்தி.  ஸ்டார்க், சிடில் ஆகியோரும் ஆட்டம் இழந்து வெளியேற, கடைசி விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். கடைசி வீரர் லயன் தன் பங்கிற்கு 28 பந்துகளைச் சந்தித்தார்.  இறுதியில் அஷ்வின் லையனை வெளியேற்றி இந்த இன்னிங்ஸில் 7 வது விக்கெட்டைக் கைப்பற்றினார். 

உணவு இடைவேளைக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 380 ரன்களை எடுத்தது.ரவிச்சந்திரன் அஷ்வின் 42 ஓவர்களில் 12 மைடன்களுடன் 103 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.ரவீந்திர ஜடேஜா  இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

         சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆன பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 12.20 மணிக்கு இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. சேவாக், முரளிவிஜய் களம் இறங்கினார்கள். 2​வது ஓவரில் முரளி விஜய் முதல் பவுண்டரியை அடித்தார். பட்டிசன் வீசிய 4​வது ஓவரில் விஜய் ஆட்டம் இழந்தார். முரளி விஜய் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்தபோது பேட்டின்சன் நேராக ஒரு பந்தை வீசி சற்றே உள்ளே ஸ்விங் செய்தார். முன்னங்காலை பந்தின் பிட்சிற்கு அருகே நகர்த்தாமல் அதனை கவர் டிரைவ் ஆட முயன்றார் விஜய் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பை பெயர்த்தது.அவரது பந்தில் விஜய் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 10 ரன் எடுத்தார்.

அடுத்து சேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்த விளையாடினார். சிறிது நேரத்தில் சேவாக் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.  2 ரன்கள் எடுத்த சேவாக் கண்ணாடி அணிந்திருந்தார். பேட்டின்சன் பந்து ஒன்று வேகமாக உள்ளே வர அவர் அதனை தடுத்தாட பந்து மட்டையின் மேல் பகுதியில் பட்டது. பந்து 147 கிமீ வேகத்தில் வந்தது. பேட்டில் பட்டு மேலே எழுந்தது. அது ஏற்கனவே சேவாகிற்கு பின் புறம் மேலே இருந்தது.

பந்து எங்கேயென்று தேடிய சேவாக் அது நேராக மேலிருந்து பைல்களில் இறங்கியதை பரிதாபமாக பார்க்கத்தான் முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை.

இந்தியா சேவாக், முரளி விஜய் விக்கெட்டுகளை பேட்டின்சனிடம் மோசமாக பறிகொடுத்தது.

 உடனே களமிறங்கிய சச்சின் புஜாராவுடன் இணைந்தார். வந்தவுடனேயே அபாரமாக அவரது டிரேட் மார்க் கவர் டிரைவில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை வேகமாக பாயிண்டில் தள்ளினார் பவுண்டரி. அடுத்த இன்ஸ்விங்கர் பைன்லெக் திசையில் பவுண்டரிக் கு ப் பறந்தது. தேர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 எடுத்திருந்தது.

தேர் இடைவேளைக்குப்    பின்னர் சிறிது நேரம் கூட புஜாரா (44) நிலைத்து நிற்கவில்லை. பேட்டின்சன் வீசிய பந்தை தடுத்தாட முயன்ற புஜாரா போல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து  சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீராத் கோலி இணைந்து ஆடினர்.

சச்சின் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்..

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில்  ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. 

 சச்சின் டெண்டுல்கர் 71 ரன்களுடனும், கோலி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரு அணி வீரர்கள் வருமாறு:​

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், முரளி விஜய், புஜாரா, தெண்டுல்கர், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன்சிங், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா.

ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், எட்கோவன், ஹியூக்ஸ், வாட்சன், வாடே, ஹென் ரிக்ஸ், பீட்டர் சிடில், மைக்கேல் ஸ்டார்க், பேட்டின்சன், நாதன் லயன்.

நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), எராமஸ் (தென் ஆப்பிரிக்கா). டெவிலிசன் நடுவர்: குல்கானி (இந்தியா). மேட்ச் நடுவர்: பிராட் (இங்கிலாந்து).

இதை ஷேர் செய்திடுங்கள்: