முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு பின்னணியில் பாகிஸ்தான்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

மும்பை,பிப்.24- ஐதராபாத்தில் நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு பின்னிணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் கடந்த வியாழன் அன்று நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலியானார்கள் 117 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மும்பைக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஐதராபாத் நகரில் நடந்துள்ள குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிழல்யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடன் பல தடவை போரிட்ட பாகிஸ்தானால் வெற்றிபெற முடியவில்லை. அதனால் இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது என்றார். ஐதாராபாத் நகரில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு பாகிஸ்தானின் கைவேலைதான். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இந்தியாவில் தீவிரவாதம் மூலம் இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் அனைத்து வகையிலும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பும் உறுதி அளித்ததை பாகிஸ்தான் மதிக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கமாட்டோம் என்று முஷாரப் உறுதி அளித்தார். அதை தற்போது பாகிஸ்தான் மதித்து நடக்க வேண்டும் என்றும் அத்வேனி கேட்டுக்கொண்டார். ஐதராபாத் குண்டுவெடிப்பில் இருந்து பாகிஸ்தான் ஒதுங்கிக்கொள்ள முடியாது என்றும அத்வானி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்