முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி கருத்துக்கு கம்யூ.தலைவர் ராமகிருஷ்ணன் கண்டனம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 23 - கருணாநிதி கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கேரள, தமிழக தேர்தல் களம் குறித்து மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கட்சியின் ஆங்கிர வார ஏடான பீப்பிள் டெமாக்ரசியில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதன் தமிழாக்கம் ஒரு நாளேட்டில் வெளியிடப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பார்த்தும் மறந்தாரே காரத்! என்ற தலைப்பில் ஒரு நாளேட்டில் கருணாநிதி பதில் ஒன்றை எழுதியுள்ளார்.

கம்யூனிட் இயக்கத் தலைவர்கள் மீது வருத்தம், கோபம் ஏற்பட்டாலும் அதை வெளிப்படுத்தும்போது அன்பையும், பழைய நட்பைபும் என்றைக்கும் நான் மறந்தவன் அல்ல என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிட் கட்சியை நான்தான் வளராமல் பார்த்துக்கொண்டேன் என்ற கூற்றும், புனைப் பெயர்களில்  ஒரு நாளேட்டில் வந்த கவிதைகளும்  அன்பின்பாற்பட்ட நாகரீகமான வெளிப்பாடு தானா என்பதை விளக்கும் கடமை அவருக்கு உண்டு.

ராமகிருஷ்ணன்கள் நரகல் நடையில் திமுகவை  இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் எடுக்கப்படும் அரசியல் நிலைபாட்டின் அடிப்படையில்தான் விமர்சனங்களை அது முன்வைக்குமே தவிர, தவறுகளை சுட்டிக்காட்டுமே தவிர, குற்றங்களை இடித்துரைக்குமே தவிர, நரகல் நடை, நாராச மொழி மார்க்சிட் கட்சித் தலைவர்கள் அறியாத ஒன்று.

கம்யூனிசம் என்ற கொள்கை தம்மை இயக்கிக் கொண்டிருக்கிற குன்றாத குருதியோட்டமாகத் திகழ்வதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிட் பற்று என்பது வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுவதல்ல, செயல்பாட்டிலும், நடைமுறையிலும் அதன் தாக்கம் இருக்க வேண்டும். பன்னாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆலைகளில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள குறைந்தபட்ச உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக்கூட மறுக்கும்போது திமுக அரசு யார் பக்கம் நின்றது என்பதிலிருந்தே.தி.மு.க.வின் சார்பு நிலை தீர்மானிக்கப்படும்.

தொழிற்சங்க உரிமகளை மறுத்ததற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அதை வலியுறுத்திய தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கைவிலங்கு nullட்டியது,  தொழிலாளர், சத்துணவு ஊழியர், அரசு ஊழியர், மாணவர்கள் போராட்டங்களின்போது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது போன்றவற்றை பார்க்கும்போது  முதல்வர் சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கு அது வலுச்சேர்ப்பதாக இல்லை.

அணு ஒப்பந்தம் போன்ற கருத்துக்களை மணிக்கணக்கில் பிரகாஷ்காரத்துடன் உரையாடி விவாதித்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையெழுத்திடக்கூடாது என்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. போன்ற கட்சிகள் இதற்காக காங்கிரஸ் கட்சியை வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிட் கட்சி அத்தகைய விவாதங்களின் போது வலியுறுத்தியது.  இடதுசாரிக்கட்சிகளின் அச்சத்தில் நியாயம் உண்டு என்று அப்போது கருணாநிதி கூறினார். ஆனால் அந்த உடன்பாட்டில் இறுதியாக கையெழுத்திட காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவுசெய்தபோது ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தி.மு.க காட்டவில்லை என்பதையும், நம்பிக்கை  கோரும் தீர்மானத்தின் போது அரசுக்கு அனைத்து வகையிலும் தி.மு.க துணையாக நின்றது என்பதையும் மறந்துவிடுவதற்கில்லை.

குடும்ப முன்னேற்றக் கழகம் என்று குற்றம் சாட்டும் பிரகாஷ்காரத்தும் அவருடைய துணைவியார் பிருந்தா காரத்தும் இணைந்து இயக்கப்பணி ஆற்றவில்லையா என்று கருணாநிதி கேட்டுள்ளார்.

தோழர் பிரகாஷ்காரத் படிக்கும் காலத்திலேயே மாணவர் சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். கட்சியில் இணைந்து தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் மூலம் உயர் பொறுப்புக்கு வந்தவர். தோழர் பிருந்தா காரத்தும் மாணவர் சங்கம், மாதர் சங்கம் என பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி கட்சிப் பொறுப்புக்கு வந்தவர். இவர்கள் இருவரும் இல்லற வாழ்விலும் இணைந்தனர். ஆனால் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை அபகரித்துக்கொண்டதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்றதில்லை. அதன் வழியாக சொத்து சேர்த்ததும் இல்லை என்பதும் முதல்வரின் கேள்விக்கு விடையாகவும் விளக்கமாகவும் விளங்குகிறது. குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக்கூடாது என்பதல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக்கூடாது.

ஆனால் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியிலும் மத்திய​மாநில ஆட்சியிலும் எத்தனை பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதையும் கேபிள் டிவி துவங்கி திரையரங்கு வரை, கல்வி நிலையங்கள் துவங்கி கப்பல், விமான போக்குவரத்து வரை கையகப்படுத்தி அதன் வழியாக தங்கள் சொத்துக்களை அதிகரித்திருக்கிறார்கள் என்று பட்டியல் போடவேண்டிய அவசியமில்லை. பல்வேறு ஊடகங்களிலும் வந்த செய்திதான் அது. nullநீராராடியா டேப் உரையாடலும் இதற்கு மேலும் சான்றாக அமையும்.

குடும்பத்தினரிடையேயான ஆதிக்க போட்டி எவ்வாறு அரசியல் கொலைகள் வரை இட்டுச்சென்றது என்பதும் தமிழகம் அறிந்த செய்திதான். இதனால் தான் குடும்ப முன்னேற்றக்கழகமாக திமுக மாறிவிட்டது  என்று பிரகாஷ் காரத் குறிப்பிட்டுள்ளார்.

திருமங்கலம் இடைத்தேர்தல் துவங்கி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரை திமுக நடத்திய பண விநியோகத்தை, அதன் மூலம் வெற்றி பெற நினைப்பதை அந்தக்கட்சி பெருமையாக கருதுகிறதா? இல்லையெனில் அந்த குற்றச்சாட்டை ஆதாரnullர்வமாக மறுக்க முன்வரட்டும்.

நெருக்கடி நிலை காலத்தில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இடமாக தமிழகம் இருந்தது என்று தோழர். ஈ.எம்.எ நம்nullதிரிபாட் குறிப்பிட்டதை பிரகாஷ்காரத் பார்க்காமல் இருந்துவிட்டாரே அல்லது பார்த்தும் அதை இப்போது மறந்துவிட்டாரே என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அவசர நிலைக்காலத்தில் தி.மு.க எடுத்த நிலையை மார்க்சிஸ்ட் கட்சி மறக்கவில்லை. பார்க்கத் தவறியதுமில்லை. ஆனால் அதே நேரத்தில் அவசர நிலை காலத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க இப்போது எத்தகைய அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதையும் பார்க்கவேண்டியதுள்ளது அல்லவா?. மாநில சுயாட்சிக்காக திமுக போராடும்போது துணை நிற்க மார்க்சிஸ்ட் கட்சி தயங்கியதில்லை. அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டபோதெல்லாம் கண்டிக்கத் தயங்கியதும் இல்லை. சரியான நிலைபாடு எடுக்கும்போது அதை பாராட்டுவதும், தவறு செய்யும்போது கண்டிப்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கம்.

அவசர நிலை காலத்தை எதிர்த்த திமுக, 63 இடங்கள் அதுவும் காங்கிர கேட்கும் இடங்கள் என்று  ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்தபோது ஆட்சியிலிருந்து விலகுவதாக கூறிவிட்டு பின்னர் அவர்கள் விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏன் வந்தது. உண்மையில் இந்த விஷயத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை என்ன என்ற கேள்வி எழுவது இயல்புதானே.

நெருக்கடி நிலை எதிர்ப்பு என்பது திமுகவின் கடந்த கால நினைவாகவே இருக்கிறது. காங்கிரசின் அடாவடிகளுக்கு பணிந்து போவது என்பது நிகழ்கால நிஜமாக இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை காணும்போது உண்மையில் மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. குடும்ப அரசியலின் நிர்ப்பந்தங்களுக்காக அரசியல் முடிவுகள் எடுப்பது, குடும்பத்தினரை வழக்குகளிலிருந்து பாதுகாப்பது, குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்காக மிரட்டல்களுக்காகப் பணிந்து போவது போன்ற காரியங்களில் தி.மு.க தலைவர் இறங்கிவிட்டதால்தான் குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற விமர்சனம் பொதுமேடைகளில் வைக்கப்படுகிறது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்